121
இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சல் காரணமாக 133 பேர் உயிரிழந்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதனால் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளது எனவும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர் எனவும் இந்தோனேசியாவின் நோய் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love