Home உலகம்எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிப்பு

எகிப்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிப்பு

by admin


எகிப்தின் கிறிஸ்துவுக்கு முன் 305-30 காலப்பகுதியான டூல்மிக் ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட உடல்களில் 12 குழந்தைகளின் உடல்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சில துணிகளால் மூடப்பட்டிருந்ததுடன் மற்றவை கல்லாலான பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளிலோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்:ள்ளது.

பதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் யாருடையது என தெரியவில்லை என தெரிவித்துள்ள எகிப்திய அதிகாரிகள் இவர்கள் அக்காலகட்டத்தில் அரசில் முக்கிய பதவி வகித்திருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More