Home இலங்கைகுழந்தையை கொன்றுவிட்டு காணவில்லையென முறைப்பாடு செய்த தாய்

குழந்தையை கொன்றுவிட்டு காணவில்லையென முறைப்பாடு செய்த தாய்

by admin

அனுராதபுரத்தில் தனது குழந்தையை காணவில்லை என தாயார் முறைப்பாடு செய்திருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக குழந்தை தேடப்பட்டு வந்தநிலையில். தற்போது, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைகளின் பின்னர், தாயாரே தனது குழந்தையை கொன்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அனுராதபுரம் சாலியவௌ கிராமத்தை சேர்ந்த தெனுரி திஸாரா என்ற நான்கு வயதுச் சிறுமியை கடந்த நான்கு நாட்களாக 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 30ஆம் திகதி முதல் தேடுதல் இடம்பெற்றபோதும், இதுவரையில் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியை தாயாரே கொன்றிருக்கலாம் என பிரதேச மக்கள் தகவல் தெரிவித்திருந்த நிலையில், காவல்துறையின் தீவிர விசாரணையின் தனது குழந்தையை தானே கொன்று வீசியுள்ளதாக தாயார் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More