Home உலகம்30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா

30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா

by admin


30 ஆண்டுகளுக்கு பின்னர் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹொலிவூட் திரையுலகின் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதானது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதனால், தான் ஒஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More