Home உலகம்பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை…

by admin


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமாராக பதவி வகித்த யூசுப் ரசா கிலானி தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி விளம்பர நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூர் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில் அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் யூசுப் ரசா கிலானி பெயர் இருப்பதை தெரிவித்த அதிகாரிகள் அவரது பயணத்தை ரத்து செய்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More