138
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈ. பி. ஆர். எல் எவ் மாநாட்டில் விக்னேஸ்வரன் கலந்துகொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுவைத்ததாகவும் அந்த ஆவணத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Spread the love