198
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கால்பந்து கழக பயிற்சி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பயிற்சி மையத்தில் இன்று அதிகாலை சிலர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தீ விபத்தில் கால்பந்துக் கழகத்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love