Home இலங்கைஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை இடைநிறுத்தம்

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை இடைநிறுத்தம்

by admin

பொது பல சேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரருக்கு 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் வழங்கப்பட்ட 01 வருட கடூழியச் சிறைத் தண்டனையை இடைநிறுத்துவதற்கு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் ஞானசார தேரருக்கு 06 மாதங்களில் நிறைவடையும் வகையில் 01 வருட சிறைத் தண்டனையை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் கடந்த ஜூன் 14ம் திகதி வழங்கியிருந்தது.

இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் வழக்கறிஞர்கள் மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்த நிலையில் அதற்கான தீர்ப்பினை அறிவித்த ஹோமாகம நீதிமன்றம் இந்த தண்டனையை 05 வருடங்களுக்கு இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.

2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More