இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.


கித்துல்கல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று ( 09.02.2019 ) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே இவர் சுழியொன்றில் அகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி கித்துல்கல காவல்துறை  பாதுகாப்பு பிரிவினரும், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் கித்துல்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link