உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நிகழ்த்திய வான் தாக்குதலில் தலீபான் தளபதி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படைகள் வான்தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர் எனவும் கொல்லப்பட்டவர்களில் தளபதி ரபியுல்லாவும் ஒருவர் எனவும் மேலும் தலீபான்கள் சிலர் படுகாயம் அடைந்ததாகவும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல் பற்றி தலீபான்கள் தரப்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.