Home இலங்கைகளனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

by admin


கித்துல்கல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கித்துல்கல களுகொவ்தென்ன பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞன் இன்று 10.02.2019 அன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் தங்கல்ல பகுதியிலிருந்து 18 பேர் கொண்ட தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற போது, வழியில் கித்துல்கல பகுதியில் நீராட சென்ற வேளையில் இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுக் காணாமல் போயிருந்தார்.

சுவாரபுர பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து நிலுபுல் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்h.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் தொடர்பில் கித்துல்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More