நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா இன்று (10.02.2019 பாடசாலை அதிபர் என்.கருணாநிதி தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி புதிய கட்டிட தொகுதியை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், கோட்டம் 3ற்கான கல்வி பணிப்பாளர் வடிவேல் ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
இக்கட்டிடம் கல்வி அமைச்சின் 8.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 10.02.2019 அன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் நான்கு வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 5 இலட்சம் ரூபா செலவில் பாடசாலைக்கான தளபாடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண உதவி கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)