Home இலங்கையாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்….

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்….

by admin

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வாகனம் எரிந்து நாசமாகியது.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை நடத்தியது. சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“6 பேரில் இருவர் வீட்டுக்கு வெளியே நின்றனர். 4 பேர் வீட்டு வளவுக்குள் புகுந்தனர். வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு பெற்றோல் குண்டை எறிந்தனர். வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றனர்” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த வீட்டுக்கு முன்னரும் தாக்குதல் நடத்தப்படமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More