Home இலங்கை நல்லூர் பிரதேச சபையில் சிறப்­புச் செய­லணி..

நல்லூர் பிரதேச சபையில் சிறப்­புச் செய­லணி..

by admin

நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில்நேற்று இடம்­பெற்­றது.

இந்த அமர்­வில் சபை உறுப்­பி­னர் கௌசல்யா, இராசாயண கலவை கலந்த மருந்துக்களை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதனை தடுக்கவேண்டும். அதனால் பொது­மக்­க­ளுக்கு பெரும் நோய்­களை ஏற்­ப­டுத்தி உயிர் ஆபத்து கூட ஏற்படலாம் என தெரிவித்து தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இது தொடர்­பில் கருத்து தெரி­வித்த சபை உறுப்­பி­னர் இரா­ச­லிங்­கம், சந்­தை­க­ளி­லும் பழக் கடை க­ளி­லும் ஏரா­ள­மான மருந்து விசி­றிய பழங்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. இதனை வாங்கி உட்­கொள்­ப­வர்­கள் பல பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர்.

எனவே இதற்­கென நாம் சிறப்­புச் செய­லணி ஒன்றை பொது­சு­கா­தார பரி­சோ­த­கர் தலை­மை­யில் உரு­வாக்கி விரை­வான செயற்­பாட்­டில் இறங்க வேண்­டும் என்­றார்.

அதனை சபை ஏக மனதாக ஏற்று மருந்தடித்த பழங்களை விற்பனை செய்வதனை தடுக்கவும், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சுகாதார பரிசோதகர் தலைமையில் விசேட செயலணி ஒன்று உருவாக்க சபை தீர்மானித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More