யாழ்ப்பாணம், நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீட்டு வளவு ஒன்றில் கிணறு வெட்டிய போது மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள, நிலையில், அதனை தோண்டி எடுப்பதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
நேற்றைய தினம், நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீட்டு வளவு ஒன்றில் வீட்டிற்கு பின்புறம் கிணறு வெட்டிய போதே குறித்த குண்டு தென்பட்டதாக யாழ் நாகர்கோவில் காவல்துறையினர் தெரிவித்தனர். இப் பகுதி பல வருடங்களாக தொடர்ந்து போர் இடம்பெற்ற பகுதியாகும்.
இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் 120 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு அப்பகுதி தோண்டப்படவுள்ளது.