குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் ஒரு அரசியல் பிரச்சினை, இத் திட்டம் தொடர்பா இதுவரைக்கும் பல ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் இரணைமடுவில் உள்ள மேலதிக நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல், உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டர்
இன்று (15) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இரணைமடுவில் எந்த அரசயிலும் இல்லை. அப்படி பார்த்தால் கிளிநொச்சியில் நானூறு குளங்கள் உண்டு எனவே அவற்றுக்குப் பின்னாள் நானூறு அரசியல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர். இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டு செல்வதற்கு மாறாக பாலியாறு மற்றும் ஆறுமுகம் திட்டம் பற்றி சிந்திக்க வேண்டும்.
இரணைமடுவுக்கு கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் சிறுபோகம் செய்ய முடியும் ஆனால் தற்போது குளம் உயர்த்தப்பட்ட பின்னர் 15 ஆயிரம் ஏக்கர் வரை சிறுபோகம் மேற்கொள்ள முடியும் எனவே எவ்வாறு மேலதிக நீரை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முடியும்? எனக்கேள்வி எழுப்பினார்.
இதன் போது கருத்துரைத்த பிரதமர் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் தொடர்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரிசன், மற்றும் மத்திய, மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.