Home இலங்கைமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :

மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பு மாணவரான ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் தேடிய போதே குறித்த மாணவன் மணல் காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற அடம்பன் காவல்துறையினர் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More