அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரையான காலத்தில் கிடைக்கப்பபெற்றுள்ள இந்த முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதியிலிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ; ஊழல் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 14ம் திகதி கூடிய போது ஆணைக்குழுவுக்கு முதலில் கிடைத்த 48 முறைப்பாடுகளில் இரண்டினை விசாரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment