0
ஐந்தாம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு அறிக்கை இன்றையதினம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பிலான முன்னேற்றத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிதியம் உறுதியளித்துள்ளது எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Spread the love