Home இந்தியாமலேசியாவில் சிக்கியிருந்த 49 தமிழக தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்…

மலேசியாவில் சிக்கியிருந்த 49 தமிழக தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்…

by admin

மலேசியாவில் சிக்கியிருந்த 49 தமிழக தொழிலாளர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த 49 தொழிலாளர்கள் மலேசியாவில் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காகச் சென்றிருந்த நிலையில் மலேசியாவில் தாங்கள் மிக வும் கஷ்டப்படுவதாகவும் தம்மை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் வீடியோ பதிவொன்றினை அனுப்பியிருந்தனர்.

இத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கவனத்துக்கு கனிமொழி கொண்டு சென்ற அதேநேரம் தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. இந்நிலையில் மலேசியாவில் இருந்து 49 தொழிலாளர்கள் மீட்கப் பட்டு விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை தமிழக அரசு தங்களை மீட்கவில்லை எனவும் கனிமொழியின் முயற்சியால்தான் தாங்கள் மீட்கப்பட்டோம் எனவும் தெரிவித்து அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஏறாமல், அவர்களது உறவினர்கள்  ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஏறி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More