723 ஆவது நாளாக தொடர்ந்து நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இன்றைதினம் இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது நிலமீட்பு தொடர்பில் அரசாங்கத்தினால் ஏதாவது வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் போராட்ட காரர்களின் தற்போதைய நிலைகுறித்தும் தூதரக அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து கேப்பாபுலவு மக்களிடம் கருத்து தெரிவித்து இலங்கைக்கான சுவீஸ்தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி தான் கடந்த முறை கேப்பாபுலவு மக்களின் போராட்ட இடங்களுக்கு வந்தவேளை இந்த மக்கள் சொந்த நிலங்களுக்கு சென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்றதாகவும் ஒரு ஆண்டுக்கு பின்னர் தற்போது வந்துள்ள போதும் குறித்த மக்கள் தொடர்ந்து தமது சொந்த நிலத்தை கேட்டு போராடிக்கொண்டிருப்பதை நினைத்து கவலலையடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மக்களின் பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொண்டுள்ளதாகவும் ஏற்கனவே இந்த மக்கள் எல்லா தரப்பிடமும் தமது பிரச்சனைகளை கொண்டு சென்றும் அவர்களது நிலங்கள் விடுவிக்கப்படாமையானது துரதிஸ்டவசமானது எனவும் தெரிவித்தார்.
சுவிஸ் தூதரக அதிகாரிகள் கேப்பாபுலவுக்கு சென்றிருந்த வேளையில் அரச புலனாய்வாளர்கள் போராட்ட இடத்தின் சுற்றிலும் நின்று அவதானிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment