எகிப்தில் காசிம் பராகாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எகிப்தின சிரேஸ் அரச நட்டதரணியாக இருந்து காசிம் பராகாத் தீவரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரச தரப்பில் முன்னிலையாகி பல தீவிரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த 2015-ம் ஆண்டு தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, தீவிரவாதிகளதற்கொலைத்தாக்குதல் மேற்கொண்டு அவரை கொலை செய்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 28 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.