169
ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுமுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் எந்த தரப்பினரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை எனவும் மாத்தறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் ஊடக இந்த விசாரணை முறைப்பாடின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாராவது முறைப்பாடு செய்தால் அது சம்பந்தமாக மற்றொரு விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது
Spread the love