மதத்தின் பெயரால் நடத்தப்படுவது இல்லை – தற்கொலைத் தாக்குதல்களுக்கு மதசாயம் பூச முடியாது..
அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11இல் இடம்பெற்ற தாக்குதலுக்கு முன்னதாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே தற்கொலை தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றம் தணியும் என்ற அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்கும் முடிவை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்த அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்கொலை குண்டு தாக்குதல் என்பது பலவீனமானவர்களின் தந்திரம் என்று கூறிய இம்ரான்கான் அதற்கு மதச்சாயம் பூசமுடியாது என்றும் ஆனால், இந்த தந்திரம் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான உண்மையான காரணிகளை அனைவரும் தேடவேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தற்கொலைத் தாக்குதலலை நடத்தும் தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலைத் தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடத்தப்படுவது இல்லை. அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பாகவே உலக அளவில் அதிக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் விடுதலைப்புலிகளே என்றும் அவர்கள் இந்து மத நம்பிக்கையை கொண்டவர்கள் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். அந்த வகையில் இந்துக்களான புலிகள் நடத்திய தாக்குதல்கள் யாவும் மதத்தின் பெயால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை அதனை அவர்கள் மேற்கொண்டனர் என இம்ரான் கான். தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள அடிப்படைப் பிரச்சனை காஷ்மீர். இந்நிலையில் இந்திய மக்களுக்கு ஒரு கேள்வியை முன்வைப்பதாக கூறிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா கடைபிடித்துவரும் ஒடுக்குமுறைக் கொள்கை இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவுமா, மோசமாக்க உதவுமா? என்றும் இம்ரான் கான் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.