Home உலகம்சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் 25 பேர் பலி -35 பேர் காயம்

சோமாலியாவில் தற்கொலைத் தாக்குதல் 25 பேர் பலி -35 பேர் காயம்

by admin

சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மொகதிசு நகரில் கார் ஒன்றில் குண்டுகளுடன் வந்த தற்கொலைக் குண்டுதாரி அதனை வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடிப்பின் காரணமாக அங்குள்ள விடுதிகள் கடைகள் , கட்டிடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மொகதிசு நகரில் வேறு இரு குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த இத் தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சோமாலியாவில்ல் ஆளும் அரசை நீக்கி விட்டு இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய முயற்சி செய்து வரும், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பல வருடங்களாக அங்கு பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More