தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான சௌத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த விமானி ஒருவர் பதவி விலகியுள்ளார்.
வில்லியம் சாண்ட்லர் எனும் குறித்த நபர் மீதான குற்றச்சாட்டு அவரது ஆவணங்கள் சரிபார்த்தபோது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து பெரும் தொகையை கோரியுள்ள விமான சேவை நிறுவனம், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் இருந்து ஜெர்மனிக்கான ஒரு பயணத்தின்போது, சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட அதிர்வுகளின்போது, அவர் விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தைத் எழுப்பியதனை தொடர்ந்து அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது அவர் மீதான குற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
விமானியாதவதற்கு முன்பு வில்லியம் விமானப் பொறியாளராக பணியாற்றியுள்ளார். சர்வதேச விமானங்களை இயக்கும் விமானிகள் ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் லைசன்ஸ் எனும் உரிமத்தை வாங்குவது கட்டாயம் என்பதுடன் அதனை ஆண்டுதோறும் புதுப்பிப்பதுடன், உடல் தகுதி தேர்வுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது