குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த சிவராத்திரி திருவிழா நாளை திங்கட்கிழமை (3) இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் சீரமைப்பு வேலைகள் நடை பெற்று வருகிறது.
அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் அமைப்பட்து என்பதனால் குறித்த வளைவு துருப்பிடித்திருந்த நிலையில் அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அப்பகுதிக்கு வந்த எள்ளுப்பிட்டி கிராமம் உற்பட சில கிராமங்களைச் சேர்ந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குள் உள் நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொருக்கியுள்ளனர். ஆண்கள் ,பெண்கள்,இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த குறித்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர்.
-குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கேதீஸ்வர திருத்தளத்தின் பக்தர்களினால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்ட போதும்,எவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்களும் சம்பவம் முடிவடைந்த பின்னரே வருகை தந்ததாக மக்கள் தெரித்துள்ளனர்.
-திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா சிவராத்திரி நிதழ்வுகள் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த சம்பவம் திட்டமிட்ட ஒரு சதி எனவும்,மக்களை தூண்டி விட்டு குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டிருந்த கத்தோலிக்க அருட்தந்தையருக்கு எதிராக மன்னார் ஆயர் இல்லம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மன்னாரில் சர்வ மத அமைப்பு இருந்தும் எவ்வித பலனும் இல்லை என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.