இலங்கை பிரதான செய்திகள்

மன்னாரில் விபத்து -இளைஞன் பலி -3 பேர் படுகாயம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு ஒன்று எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) மதியம் இடம் பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேளையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியை சேர்ந்த ஜக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அதே நேரத்தில் பயணித்த மேலும் 3 பேர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.