Home இலங்கைஆயிரம் ரூபா சம்பள உயர்வு, லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி….

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி….

by admin

துவிச்சக்கர வண்டி பயணம் கிளிநொச்சியை அடைந்தது….

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கவும், தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றி வைத்து தனி வீடுகள் அமைத்து வழங்க கோரி மேற்கொள்ளப்பட்ட துவிச்சக்கர வண்டி பயணம் இன்று(04) கிளி நொச்சியை சென்றடைந்துள்ளது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட தர்மலிங்கம் பிரதாபன்  என்பவரின் பயணம் 23 நாளான இன்று 23 மாவட்டங்களை கடந்து கிளிநொச்சியை அடைந்தது. இவரது பயணம் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து மன்னார் ஊடாக வவுனியாவில் நிறைவடையவுள்ளது. இவரது திட்டமிட்ட பயணம் 2125 கிலோ மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More