Home உலகம்மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்திய பிபிசி

மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்திய பிபிசி

by admin

பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக கடந்த மாதம் 24-ம் திகதிக்குப் பின்னர் பிபிசி வானொலி அமெரிக்க பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்கள் ஒலிபரப்புவதனை நிறுத்தியுள்ளதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொப் பாடல் உலகின் மன்னராக திகழ்ந்த் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் காலமாகியிருந்தார்.

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனின் இசைக்குழுவில் பணியாற்றிய வேட் ரொப்சன், ஜேம்ஸ் சேவ்சக் ஆகிய இருவர் தாம் சிறுவர்களாக இருந்தபோது மைக்கேல் ஜாக்சன் பலமுறை தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதுதொடர்பாக ‘லீவிங் நெவர்லாண்ட்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம் ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில் மைக்கேல் ஜாக்சனின் உறவினர்கள் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததோடு, அந்த ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 24ம் திகதிக்குப் பின்னர் இந்த பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலியாக மைக்கேல் ஜாக்சனின் பாடல்களை ஒலிபரப்புவதை ‘பிபிசி’ வானொலி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More