நான்கு நாட்களாக பகல் இரவாக முக்கிய வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். கடந்த மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவ்வீதியில் மரண வீட்டு நிகழ்வொன்றிற்காக நிழல் குடை ஒன்று வீதியின் குறுக்காக போடப்பட்டுள்ளது. இதனால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியினால் பயணம் செய்வோர் மாற்று வீதியை பயன்படுத்துகின்றனர்.
கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி நற்பிட்டிமுனை கிராமத்தை இணைக்கும் இவ்வீதி மூடப்பட்ட நிலையில் அந்நிழல் கூடையில் கரம் விளையாட்டு காட் கூட்டம் என்பன சில இளைஞர் குழுக்கள் முன்னெடுக்கின்றனர். இவர்கள் குறித்த வீதியால் செல்வோரை மாற்று வீதியால் செல்லுமாறு அச்சுறுத்துகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர காரணமாக அமையும். எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?