Home இந்தியா டெல்லியில் சிஜிஓ வளாக தீனதயாள் அந்தியோதயா பவனில் தீ….

டெல்லியில் சிஜிஓ வளாக தீனதயாள் அந்தியோதயா பவனில் தீ….

by admin

டெல்லியில் சிஜிஓ வளாகத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் அந்தியோதயா பவனில் இன்று காலை மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்புப் பணியில் குறைந்தது 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிட் தீனதயாள் அந்தியோதயா பவனின் ஐந்தாவது மாடியில் இன்று காலை 8.34 மணிக்குத் தீப்பிடித்தது எனவும் நெருப்பின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அதிக தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டெல்லி தீயணைப்பு சேவை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதலில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அலுவலகத்தில் தீப்பிடித்தது எனவும் அதைத்தொடர்ந்து ஏனைய ற இடங்களிலும் தீ பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிஜிஓ வளாகத்தில் 11 அடுக்குகளாக முக்கிய அரசு அலுவகங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் தீ விபத்துக்கு யாராவது காரணமாக இருப்பார்களா என்ற நோக்கில் விசாரணைகள் நடந்துவருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More