Home உலகம்நாட்டை விட்டு வெளியேற, ஜேர்மனிய தூதுவருக்கு, கால அவகாசம் வழங்கியது வெனிசூலா…

நாட்டை விட்டு வெளியேற, ஜேர்மனிய தூதுவருக்கு, கால அவகாசம் வழங்கியது வெனிசூலா…

by admin

நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ததாகத் தெரிவித்து, ஜேர்மனிய தூதுவர் டானியல் கிறியெனெரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு தீர்மானித்துள்ள வெனிசூலா அரசாங்கம் இதற்காக அவருக்கு 48 மணித்தியால அவகாசம் வழங்கியுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் தஞ்சமடைந்திருந்த வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவரும் சபாநாயருமான ஜூவான் குவைடோ, மீண்டும் நாடு திரும்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக டானியல் கிறியெனெரும் காணப்படுகின்றார்.

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்ட ஜூவான் குவைடோவை ஜேர்மன் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் தொடர்புடைய 77 பேருக்கான விசாவை ரத்துச் செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More