Home இலங்கைஜெனீவாவில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை என்னிடம் தெரிவிக்கலாம்

ஜெனீவாவில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை என்னிடம் தெரிவிக்கலாம்

by admin

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை (13)ஆம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தெரிகிக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கைகளை, யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியும் என்று ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More