Home பிரதான செய்திகள்இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

by admin
 

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 32 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று பகலிரவு ஆட்டமாக இடம்பெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பினை மேற்கொள்ள தீர்மானித்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 313 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனையடுத்து 314 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 281 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற றிலையில் 32 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More