Home இலங்கைஅரியாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களும் சாரதியும் கைது

அரியாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களும் சாரதியும் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அரியாலை பூம்புகார் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்ட நிலையில் டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டதுடன் உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிவிட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் சிறப்பு குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவால் இந்த மணல் கடத்தல் நடவடிக்கை இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முறியடிக்கப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அரியாலை பூம்புகார் பகுதியில் நள்ளிரவு வேளையில் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் அதுதொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பூங்புகார் பகுதியில் நேற்று நள்ளிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பாது, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் இன்று அதிகாலை 2 மணியளவில் மடக்கப்பிடிக்கப்பட்டநிலையில் உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிய நிலையில் டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டார்.

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’ என்று காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More