ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் இன்று காலை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை எல்லைதாண்டி தாக்கி அழித்ததனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் செக்டார் அருகே ஹிந்துமால்கோட்டில் பாகிஸ்தானின் உளவு விமானம் இன்று அதிகாலை நுழைந்ததாகவும் அதனை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுவீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் திகதி நடைபெற்ற விமானப்படை தாக்குதலுக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட 3-வது உளவு விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.