Home இலங்கைமருதங்கேணி வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம்

மருதங்கேணி வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

குறித்த வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அவர்கள் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும். என தெரிவித்து அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கையை முன் வைத்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை முன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் இன்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More