194
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட இன்று மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த திங்கட்கழமை உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகிய அட்;மிரல் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் வாக்குமூலமும் பதியப்பட்டிருந்தது.
இந்தநிலையில், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே அவரை இன்று மீள முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இன்றும் அவர் முன்னிலையாகியுள்ளார்.
Spread the love