Home இலங்கை2018இல் புதிதாக 28,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு

2018இல் புதிதாக 28,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு

by admin


2018 ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்க்ப்பட்டுள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இடம்பெறும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும் குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 20 வருடங்களில், வருடாந்தம் இனங்காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 29.5 மில்லியனை விட அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அபிவிருத்தி அலுவலகம் விடு;துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More