Home உலகம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை

by admin

நோர்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.  சுவீடனைச் சேர்ந்த பாடசாலை மாணவியான கிரேட்டா தன்பெர்க் கடந்த வருடம்   பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, சுவீடனின் பாராளுமன்ற வாசலில், சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டிருந்தார்

மேலும் உலக தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை புறக்கணிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து கிரேட்டா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாடிய நிலையில் அவரது பேச்சு உலகின் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக விளங்கியுள்ளது

மேலும் கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாடசாலைக்கு செல்வதை விடுத்து, பாராளுமன்ற வாசலில் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தபெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை மிகுந்த  இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தபெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை மிகுந்த கௌரவமாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்

தேசிய தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்கள் என 304 பேர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More