ஆபிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதனால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் இந்த புயல் கரையை கடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலால் ஏற்பட்ட அதிதீவிர மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது