178
மலையகத்தின் சில பகுதிகளில் இன்று காலை சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பதுளை, வெலிமடை, ஹாலி- எல, பசறை, நுவரெலியா, ஹக்கலை பகுதியில் இன்று காலை 8.15 மணி முதல் 8.30 மணிவரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தினால் எந்த விதமான பாதிப்புக்களும் இதனால் ஏற்படவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Spread the love