Home இலங்கையாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவு

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , இலங்கைக்கு கால அவகாசாம் வழங்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தும் யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றுள்ளது

ஐ.நா மனிதவுரிமை சபையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பித்த குறித்த பேரணி அங்கிருந்து பலாலி வீதியூடாக , முற்றவெளியினை சென்றடைந்திருந்தது.

குறித்த பேரணி தமிழ் கட்சிகள் , சிவில் அமைப்புக்கள் , உள்ளிட்ட பெருமளவானவர்கள் ஆதரவளித்ததுடன் , பேரணியிலும் கலந்து கொண்டனர்.

படங்கள் :- பாலசிங்கம் கஜீபன்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More