Home இலங்கைகாணாமல் போனோருக்கான அலுவலக வெற்றிடங்களுக்கு காணாமல்போனோரின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்

காணாமல் போனோருக்கான அலுவலக வெற்றிடங்களுக்கு காணாமல்போனோரின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்

by admin


காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு புதிய ஆட்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் குறித்த பதவிகளுக்கு காணாமல்போனோரின் நேரடி குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரப்பட்டுள்ள தகைமையை உடையவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என காணாமல் போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் இது தொடர்பில் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் வெற்றிடங்கள் குறித்த விபரம், வயதெல்லை, சம்பள விபரம் மற்றும் தகைமைகள் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More