Home இலங்கைமண்டைதீவு படகு கவிழ்ந்து விபத்து – இளைஞன் உயிரிழப்பு

மண்டைதீவு படகு கவிழ்ந்து விபத்து – இளைஞன் உயிரிழப்பு

by admin

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவை சேர்ந்த 19 வயதான ஜோன் அன்ரனி டினேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று புதன்கிழமை கடற்தொழிளுக்காக படகில் தனது நண்பரான மற்றுமொரு இளைஞனுடன் சென்று கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த வேளை கடலில் காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது.

அதனால் படகில் இருந்த இரு இளைஞர்களும் கடலில் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் , ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More