கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையானது மனிதாபிமான ஆயுதக் களைவுகள் மேற்கொள்வதனை வரவேற்க முன்னிற்கும் அரசு என்னும் அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இதற்கான அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது