கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கிகளை நியூசிலாந்து அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் அவர் பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ள நிலையில் அத்தகைனய துப்பாக்கிகளை கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
இந்த புதிய துப்பாக்கி சட்டங்கள் ஏப்ரல் 11-ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஹார்டன் தெரிவித்துள்ளார்.