Home இலங்கைஅல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் விபத்து – இளம் குடும்பத்தலைவர் பலி

அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் விபத்து – இளம் குடும்பத்தலைவர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 21 வயதான நிதர்ஷன் என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.

மோட்டாா் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது எனவும் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More