Home உலகம்கனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை

கனடாவில் விபத்தினை ஏற்படுத்திய சாரதிக்கு 8 ஆண்டுகள் சிறை

by admin

கனடாவில் பேருந்து மீது பாரவூர்தி மோதி விபத்தினை ஏற்படுத்தி 16 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பில் இந்தியரான சாரதிக்கு ஒருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் ஜூனியர் ஹொக்கி வீரர்கள் உட்பட 29 பேர் சென்று கொண்டிருந்த பேருந்தானது நெடுஞ்சாலையில் எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த பாரவூர்தியுடன் மோதியதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததுடன் மேலும் 13 பேர் பலத்த காயமடைந்திருந்தனர்.

விபத்து தொடர்பாக பாரவூர்தியின் சாரதியான ஜஸ்கிரத் சிங் சித்து என்பவர் மீது பாதிக்கப்பட்டார்களின் குடும்பத்தினர் நெடுஞ்சாலையில் விதிகளை மீறி அவர் வாகனம் செலுத்தியதாகவும் அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் எனவும் குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்த நிலையில், நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமலும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமலும் அலட்சியமாக வாகனத்தினை செலுத்தியதனாலே இந்த கோரச்சம்பவம் நடந்திருக்கின்றது எனத் தெரிவித்தே நீதிபதிகள் இவ்வாறு சித்துவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More